Wednesday, February 15, 2012

காதலர் தினம் ஸ்பெஷல் - கேடி...கோடி.....கில்லாடி..."அஸ்கு லஸ்க்கு ஏமோ ஏமோ ஏய் அஸ்கு லஸ்க்கு லீபே" என்ற பாடியவாறே சுப்புவைப் (நம்ம Subroto Roy தான்) பார்க்கச் செல்கிறார் சீனு (கரெக்ட், அவரே தான்).

ஒரு கையில் பொக்கே, மறு கையில் இனிப்புப் பொட்டலம். "இன்னிக்கு எப்படியும் நல்லபடியா பேசி சமரசமாப் போயிடணும், சும்மாவா? 2000 கோடியாச்சே! "

கோபமாக இருக்கும் சுப்புவைப் பார்த்து, "என்னடா செல்லம், கோபமா இருக்கியா? "

சுப்பு, "நானா? இல்லையே"

"அய், எனக்குத் தெரியும், நான் லேட்டா வந்தேன்னு தானே?"

"ஏன்? வரும்போது அர்ச்சனாலேர்ந்து ஸ்வீட் வாங்கிட்டு வந்தியா?

சீனு, "கள்ளி, கரெக்டா சொல்லிட்டியே, இந்தாடா கண்ணா, இனிப்பு சாப்பிடு. ஹேப்பி வாலன்டைன்ஸ் டே!"

சுப்பு, "யோவ், இதெல்லாம் மொக்கை ஜோக், அர்ச்சனா ஸ்வீட்காரங்களே இதெல்லாம் நிறுத்திட்டாங்க. எனக்கு சர்க்கரை வியாதி இருக்குன்னு தெரிஞ்சே வாங்கிட்டு வந்திருக்கேல்ல? முழுசா 2000 கோடியை வருஷா வருஷம் முழுங்கிட்டு இப்போ 200 கிராம் இனிப்பு வாங்கிக் குடுத்து சரிகட்டலாம்னு பார்க்கறியா? ஐ ஹேட் யு."

சீனு வழிந்துகொண்டே, "என்னடா கண்ணு, இதுக்கெல்லாமா மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்குவாங்க?, ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா? பத்து வருஷ உறவுடா டார்லிங்! நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு அத்து விடுங்கன்னு சொன்னா எப்படி?"

சுப்பு, "அதெல்லாம் சரியா வராது, நீ வேற ஆளைப் பார்த்துக்க"

சீனு மனசுக்குள் "வேற ஆளைப் பார்க்கறதா? எவன் கிட்ட காசு இருக்கு? மந்திரிலேர்ந்து மல்லையா வரைக்கும் எப்போ சிபிஐ வந்து கதவைத் தட்டப் போகுதுன்னு திகிலோட உக்காந்திருக்கான்! நான் எவன் கிட்டக் கையேந்தறது?"சுப்பு, "என்ன? பேச்சே காணோம்?"

சீனு வழிச்சலாக, "ஹிஹி, நான் நல்ல மூட்ல இருக்கேன். இப்படி கடுப்பாப் பேசி வெறுப்பேத்தாதே, இந்த பொக்கேவை வாங்கிக்க, நாம சமாதானமாப் போயிடுவோம்"

சுப்பு, "என்ன ரொமான்சா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு, முடிஞ்சது முடிஞ்சு போச்சு, கதம் கதம்"

சீனு, "இப்படி அவசரப் பட்டா எப்படி? உனக்கென்ன இப்போ? யுவராஜை டீம்ல எடுக்கலேன்னு தானே கோபம்? பையன் அமெரிக்காவுலேர்ந்து வரட்டும், கேப்டனாவே ஆக்கிடறேன்"

சுப்பு நக்கலாக, "இப்படியெல்லாம் சொன்னா நான் நம்பிடுவேனா? இந்தியன் டீம் முழுக்க சென்னை சூப்பர் கிங்க்ஸ் மயமா இருக்கு. போற போக்கைப் பாத்தா சென்னை சூப்பர் கிங்க்ஸ்ல விளையாடறவன் தான் நேஷனல் டீம்ல இருப்பான் போலிருக்கு. இதுல இவரு யுவராஜை கேப்டனா ஆக்குவாராம். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்"

சீனு, "ஐயோ காட் ப்ராமிஸ்டா,"

"சரி, எப்படி ஆக்குவே?"

"அதெல்லாம் உனக்கெதுக்கு? நான் பார்த்துக்கறேன்"

"அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாது. என்ன சொல்லி தோனியை வெளியே தள்ளுவே?"

"காரணமா இல்லை? தொடர்ந்து டீம் தோத்துக்கிட்டே போகுதுன்னு சொல்லிடலாம்."

"அதான் ஒரு நாள் போட்டிகளில் நல்லா ஆடி ஜெயிக்கறானே?",
"சரி.. அப்போ வேணும்னே ஸ்லோவா ஆடி கடைசி வரைக்கும் மேட்சை இழுக்கறான், காசு வாங்கியிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு - அப்படின்னு சொல்லி கழட்டி விட்டுடறேன்"

"யோவ், எதாச்சும் லாஜிக்காப் பேசறியா? அவன் வாங்கறதுல பாதி உனக்குத் தான்னு ஊருக்கே தெரியும்"சீனு, "ஆமாம்ல! மறந்தே போச்சு. ஹ்ம்ம்..வேறென்ன சொல்லலாம்?" யோசிக்கிறார்.

சுப்பு, "நீ இப்படியே யோசிச்சிக்கிட்டு இரு. நான் கிளம்பறேன்"

சீனு, "அப்படியெல்லாம் பாதியில உன்னை விடமாட்டேன் சுப்பு, நீ வேணும்டா செல்லம்"

சுப்பு, "இந்தக் கொஞ்சலுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. நானே கந்து வட்டி, மீட்டர் வட்டின்னு தொழில் நடத்தி சம்பாதிச்ச காசெல்லாம் உங்களுக்குக் கொட்டிக் குடுத்தா நீங்க உங்க இஷ்டத்துக்கு ஆடறீங்களே? அப்புறம் ஸ்பான்சர்னு நான் எதுக்கு இருக்கேன்?"

சீனு, "கந்து வட்டியா? நீ ஏதோ மைக்ரோ பைனான்ஸ் பண்றதா இல்ல சொன்னாங்க?"

"நீ இங்கிலிஷ்ல சொல்றே, நான் தமிழ்ல சொல்றேன், ரெண்டும் ஒண்ணு தான்"

சீனு, "அடங்கோ..."

சுப்பு, "என்ன ஷாக்கா? இதெல்லாம் தேவையில்லாத ரியாக்ஷன். நீ கூடத் தான் சூப்பர் கிங்க்ஸ் பேரை சொல்லிக்கிட்டு இந்தியன் டீம்ல அழிச்சாட்டியம் பண்றே"

சீனு, "எவ்ளோ தடவை சொல்றது? சூப்பர் கிங்க்சுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மத்தவங்க சொல்றாங்கன்னா நீயும் அதை நம்பிடுவியா?"

"யோவ், நான் உன் கூட பத்து வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேன். எனக்குக் குத்தாதே "

சீனு திருதிருவென்று முழிக்கிறார்.சுப்பு, "இந்த அழகுல உன்னை நம்பி பூனே வாரியர்ஸ்னு ஒரு புள்ளைய வேற பெத்துக்கிட்டேன். இப்போ அந்தக் குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு. அதை ஒருத்தன் கையில புடிச்சுக் குடுத்தாத்தான் எனக்கு நிம்மதி"

சீனு, "அது நம்ம புள்ளை, அப்படியெல்லாம் அனாதையா விட்டுட மாட்டேன்"

"அப்படி எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் நான் உன்னை விட மாட்டேன், ஊரைக் கூட்டி மானத்தை வாங்கிடுவேன்"

சீனு உள்ளுக்குள் டெர்ரர் ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அதான் ஒண்ணும்
ஆகாதுன்னு சொல்றேன்ல என்னை நம்பு."

சுப்பு சற்றே ரிலாக்ஸ் ஆவதை கவனிக்கும் சீனு, "சரி, சாந்தமாயிட்டேன்னு நினைக்கறேன், அப்படியே அந்த நல்ல மூடோட இந்த பேப்பர்ல ஒரு கையெழுத்து போட்டுடுடா கண்ணு"

சுப்பு எகத்தாளமாக, "அதானே பார்த்தேன், என்னடா மாமா இன்னிக்கு ஓவரா குழையறாரேன்னு பார்த்தேன். என்ன இது? கான்ட்ராக்ட் கண்டினியூ பண்ணனுமா?"

"ஹிஹி, அதே தான், சமர்த்து, சட்டுன்னு புரிஞ்சிக்கிட்டியே""உன்னைப் பற்றித் தெரியாதா? ஏற்கனவே பேசின மாதிரி என் புள்ளைக்கு ஒரு நல்ல வழி பிறக்கற வரைக்கும் தான் நம்ம உறவு. அதுக்கப்புறம் நீ யாரோ, நான் யாரோ.

சீனு மிகவும் உருக்கமாக, "கண்டிப்பா நீ ஒரு நாள் மனசு மாறி என்னைத் தேடி வருவே, அதுவரைக்கும் நான் காலமெல்லாம் காத்திருப்பேன. ஒண்ணு மட்டும் சொல்றேன், நம்மளை மாதிரி ஒரு ஜோடியை இனி பார்க்கவே முடியாது

"ஆமாம், அப்படியே காதலுக்கு மரியாதை விஜய்-ஷாலினி பாரு, யோவ், நீ யார்னு எனக்குத் தெரியும். நான் யார்னு உனக்குத் தெரியும். நாம் ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்"

சீனு, “என்னை விடு, உன் மூத்த பையன், அதான் நம்ம நாட்டு கிரிக்கெட், அதைப் பற்றியாச்சும் யோசிச்சுப் பார்த்தியா? பாவம் வளர்ற பையன்,அவனுக்கு இனிமே யாரு சோறு போடுவா?

"அய்யடா, என்ன திடீர்னு கிரிக்கெட் பற்றிக் கவலைப்படறே? உனக்கு 2000 கோடியும் சூப்பர் கிங்ஸும் முக்கியம், எனக்கு புனே வாரியர்ஸ் பற்றின கவலை. நாம என்னிக்கு கிரிக்கெட் பற்றிக் கவலைப் பட்டிருக்கோம்?

சீனு, "கடைசியா என்ன தான் சொல்ல வர்றே?"

“மேற்கொண்டு உனக்கு வடிச்சுக் கொட்ட நம்மால முடியாது, ஆளை விடு சாமின்னு சொல்றேன். உனக்குத் தான் முகேஷ் அம்பானி, பாரதி மித்தல்னு நிறைய பேர் வரிசையில இருக்காங்களே, அவங்களோட போய் ஒட்டிக்கோ. குட் பை"- சொல்லிவிட்டு விரைகிறார்.

சீனு, "போ போ, எங்க போனாலும் என்கிட்டே தாண்டி வந்தாகணும். அது வரைக்கும் ஐ வில் வெயிட் யா"

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...