Tuesday, February 28, 2012

பீலிங்க்ஸ்....பீலிங்க்ஸ்....இலங்கைக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் என்ன பண்றாங்க, அவங்களுக்குள்ள என்ன ஓடிக்கிட்டிருக்கும்னு ஒரு சின்ன கற்பனை:

செஹ்வாக், "அப்பாடா, ஒரு வழியா சிங்கிள் டிஜிட்லேர்ந்து வெளிய வந்தாச்சு. அதுலயும் காத்தோட்டமா பேட்டை வீசி வீசி அடிக்கறதுல என்ன ஒரு ஆனந்தம்! ஆனா 30 ரன் அடிக்கறதுக்குள்ள என்னமா மூச்சு வாங்குது! ராம் தேவ் பாபாவைப் போய்ப் பார்த்து எதாச்சும் லேகியம் வாங்கி சாப்பிடணும். அப்புறம் தலைவருக்கு முன்னாடி நமக்கு கல்தா குடுத்துடுவாங்க"கொஹ்லி யாருடனோ போனில், "அதெல்லாம் கட்டாது சார். 10Cன்னா மேற்கொண்டு பேசுங்க. இல்லேன்னா கட் பண்ணுங்க. அப்புறம் முக்கியமான விஷயம். ஆசியா கப் கேப்டனா ஆக்கப் போறதா பேசிக்கறாங்க, அந்த நிறுத்தி வெச்சிருக்கற விளம்பரம் எல்லாம் உடனே ஒளிபரப்பாகணும். IPL வேற ஆரம்பிக்கப் போவுது. இப்பத்துலேர்ந்தே பில்ட் அப் குடுத்தாத் தான் ஒரு கெத்தா இருக்கும். என்னது, அடுத்த டெண்டுல்கரா? யோவ், இப்பவே அப்படியெல்லாம் போஸ்டர்ல போட்டுடாதீங்கய்யா, நான் சொல்லும்போது செஞ்சாப் போதும். ஏழும் ஏழுமலையும் ஒரு மார்க்கமானவங்க, எப்ப வேணா நமக்கு ஆப்படிச்சிடுவாங்க"ராயினா, "நல்லாப் பார்த்துக்குங்க, நானும் ஒரு பேட்ஸ்மேன் தான். 15 ரன்னுக்கு மேல அடிச்சிட்டேன். தோனி அண்ணா வாழ்க, CSK வளர்க (இருந்தாலும் முட்டைக் கண்ணனைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு)"

மைக்கேல் கிளார்க், "எப்படியாச்சும் சிறிலங்காவை அடுத்த மேட்ச்ல ஜெயிக்க வெச்சிடணும். இன்னிக்கு அடிச்சா மாதிரி பைனல்ஸ்ல அடிச்சாங்கன்னா நம்மால தாங்க முடியாதுப்பா சாமி. நம்ம பௌலிங் வேற இப்பவோ அப்பவோன்னு இழுத்திக்கிட்டு இருக்கு."

மஹேலா, "நூடில்ஸ் தலையன் காசு வாங்கியிருப்பானோ? புறம்போக்கு, இப்படியா போட்டுக் குடுப்பான்? பயபுள்ள மானத்தை வாங்கிட்டானே!. அதிகாரிங்களை விட்டு போன் டாப் பண்ணச் சொல்லணும். அது சரி, அவனுங்க இவனுக்கு மேல வசூல் ராஜாவாச்சே! புகார் பண்ணினா நம்ம மேலயே கேசைத் திருப்பிடுவானுங்க."

தில்ஷான், "இந்த எழவுக்குத் தான் நான் அடிக்கறதே இல்லை. போன தடவை இந்தியாவுக்கெதிரா 160 அடிச்சேன். அவங்க திருப்பி சுளுக்கெடுத்தாங்க. இந்த தடவையும் அதே மாதிரி ஆயிட்டுதே! அட, 160 கூட்டினா 1+6+௦0=7. இது அந்த ஆள் லக்கி நம்பர் ஆச்சே! இது தெரியாம விளையாடிட்டேனே! இனிமே எங்க போனாலும் ஒரு நியூமராலாஜி ஸ்பெஷலிஸ்டை கூடவே வெச்சிக்கணும்"

கம்பீர், "எவன் கூட ஆடினாலும் நம்மளையே கறை வெச்சு ரன் அவுட் பண்றானுங்களே! என்ன தான் உயிரைக் குடுத்து ஆடினாலும் நாம எப்பவுமே அவுட் ஆப் போகஸ்ல தான் இருக்கோம். நல்ல ஜோசியரா பாக்கணும்"

ஜடேஜா, "நல்ல வேளை இன்னிக்கு காஜ் கிடைக்கல. இல்லேன்னா நாம இருக்கற பார்முக்கு அஞ்சு, எட்டுன்னு எதையாச்சும் அடிச்சு அவுட் ஆகியிருப்போம். அப்புறம் எல்லாருமா சேர்ந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் டாரா கிழிச்சிருப்பாங்க, ஐ ஆம் எஸ்கேப்"

மலிங்கா, "இன்னிக்குன்னு பார்த்தா இப்படி சொதப்புவேன்? ஏற்கனவே நம்மளை ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அர்ஜெண்டா கொஞ்சம் பணம் வேற தேவைப்படுது. எவன் கிட்டயாச்சும் கைமாத்தா ஒரு பத்து ரூபாய் வாங்கினாக் கூட மேட்ச் பிக்சிங்க்ல வாங்கினதுன்னு சொல்லிடுவானுங்க போலிருக்கு"

தோனியும் ஸ்ரீனிவாசனும் போனில் உரையாடுகின்றனர்:

ஸ்ரீநிவாசன், "என்னய்யா, இப்ப சந்தோஷமா?"

தோனி, "சந்தோஷமா? மலச்சிக்கல் வியாதிக்காரனுக்கு ரிலீப் கிடைச்ச மாதிரி அப்படி ஒரு நிம்மதி"

ஸ்ரீநிவாசன், "இருக்காதா? கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருக்கீங்க!"

தோனி, "கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, இதுல உங்க கைங்கர்யம் எதாச்சும் இருக்கா? ஏன் கேக்கறேன்னா அவ்ளோ நல்லா ஆடிக்கிட்டிருந்த டீம் இன்னிக்கு பௌலிங் மற்றும் பீல்டிங் ரெண்டும் அநியாயத்துக்கு சொதப்பினாங்க. பாக்க எனக்கே பாவமா இருந்திச்சு"

"சூ, இதெல்லாம் போன்ல பேசற விஷயமா? எல்லாம் நேர்ல வா, பேசிக்கலாம்"

தோனி, "சரி சார், ஆசியா கப்புக்கு யாரையெல்லாம் எடுக்கலாம்னு இருக்கீங்க?

ஸ்ரீனி, "கிட்டத்தட்ட இதே டீம் தான், பெரிசுக்கு லீவ் குடுக்கலாம்னு பார்க்கறேன், அவருக்குப் பதிலா மைக் ஹஸ்ஸிய சேர்த்துக்கலாம்னு இருக்கேன்"

தோனி, "ஹஸ்சியா ? சார், அவன் ஆஸ்திரேலியா டீமுக்காக விளையாடறவன்"

ஸ்ரீனி, "ஆமாம்ல, எந்நேரமும் CSK ஞாபகமாவே இருக்கா, மறந்துட்டேன்"

தோனி, "நல்லா மறந்தீங்க போங்க. ஒரு விஷயம் சொல்லுங்க, அடுத்த மேட்ச்ல ஸ்ரீலங்கா ஜெயிச்சுடுவாங்களா சார்?"

ஸ்ரீனி, "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான், நல்லதே நடக்கும் கவலைப் படாதே"

தோனி, "பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அதுலயும் நீங்க சொன்னா அந்த பெருமாளே SMS அனுப்பிச்ச மாதிரி"

ஸ்ரீனி, "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், உனக்கும் அந்த டெல்லிக்காரனுக்கும் ஏதோ வாய்க்காத் தகராறுன்னு செய்தி வந்திச்சே..."

தோனி குறுக்கிட்டு, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார்"

ஸ்ரீனி, "இருக்கோ இல்லையோ, ரெண்டு பேரும் அப்படியே அதை மெயின்டைன் பண்ணுங்க. ஏன்னா இங்க அது பெரிய அளவுல வொர்க் அவுட் ஆயிக்கிட்டிருக்கு. என்ன புரிஞ்சுதா? அவன் கிட்டயும் சொல்லி வை"சச்சின், "ஹ்ம்ம், சாகற நேரத்துல சங்கரா சங்கரான்னு சொல்றதே நம்ம டீமுக்கு வேலையாப் போச்சு. நானும் 22 வருஷமா இந்தப் பழக்கத்தை மாத்தணும்னு பார்க்கறேன், முடிய மாட்டேங்குதே! அது சரி, முதல்ல நாம இந்த போல்ட், LBW ன்னு அவுட் ஆகற பழக்கத்தை மாத்திக்கணும். ரீப்ளே பார்க்கும்போது எனக்கே கேவலமா இருக்கு"

இலங்கை கிரிக்கெட் வாரியம் "ஒருத்தன் தோத்தா காசு தரேன்னு சொல்றான், இன்னொருத்தன் ஜெயிச்சா காசு தரேன்னு சொல்றான். யாருக்கு விசுவாசமா இருக்கறதுன்னு தெரியலையே! மழை வந்து மேட்சைக் கெடுத்தா ரொம்ப நல்லாருக்கும். பணமும் மிச்சம், பேரும் கெடாது"

தோத்தா ரொம்ப அழக்கூடாது. ஜெயிச்சா ரொம்ப ஆராயக் கூடாது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...