Wednesday, February 22, 2012

குவார்ட்டர்.....கிரிக்கெட்...குமுறல்...

மை டியர் ப்ளேயர்ஸ்,

எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணியும் என்னால முடியல. அதனால் இன்னிக்குக் கொஞ்சம் லைட்டா ஏத்திக்கிட்டேன். ஏன்னா அப்போத்தானே உங்களை நாக்கைப் புடுங்கிகிட்டு சாவற மாதிரி நாலு கேள்வி கேட்க முடியும். நான் இப்படியெல்லாம் பேசறதால ஒண்ணும் பெரிசா மாறிடப் போறதில்லைன்னு கண்டிப்பாத் தெரியும். நீங்க வழக்கம் போல செய்யறதைத் தான் செய்யப்போறீங்க. இருந்தாலும் உங்களைத் திட்டறதுல எங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம், அவ்வளவு தான். ஏதோ குடிச்சிட்டு பினாத்தறேன்னு மட்டும் நினைக்காதீங்க. குடிச்சா உண்மை மட்டும் தான் பேச முடியும். நான் சொல்றது அத்தனையும் உண்மை.



செஹ்வாக்:
உனக்கு மண்டைக்கு வெளிய தான் எதுவும் இல்லைன்னு நினைச்சேன், உள்ளுக்குள்ள சுத்தமா இல்லைன்னு தெள்ளத் தெளிவா தெரியுது. ஓபனிங்னா சும்மா பீர் கணக்கா பொங்க வேண்டாம்? செத்தவன் கையில வெத்தலை பாக்கு குடுத்த மாதிரி நீயும் பேட்டைத் தூக்கிக்கிட்டு வந்து நிக்கறே, விக்கெட் கீப்பருக்கும் ஸ்லிப்ல நிக்கறவங்களுக்கும் நல்லா சாமரம் வீசிட்டு கடைசியில எதிர்பார்த்த மாதிரியே அவுட் ஆயிட்டுப் போயிடறே. ரொம்ப நேரம் நின்னா ஏதோ வியாதி வரும்னு சொல்வாங்களே... வெரிகோஸ் வைன்ஸ்.. அது இருக்கா உனக்கு? ஒரு பத்து நிமிஷம் கூட பிட்சில நிக்க மாட்டேங்கற. உனக்கும் அந்த ஏழாம் நம்பருக்கும் ஏதோ உட்கட்சித் தகராறுன்னு பேசிக்கறாங்க. அவன் கூட ஏம்பா வம்பு உனக்கு? தேவையில்லாம வாயைக் குடுத்து நாக்கைப் புண்ணாக்கிக்காதே. நீ வேற பார்ம்ல இல்ல. அப்புறம் ஒரேயடியா உன்னை காணாம பண்ணிடுவான். மண்டையில மயிர் வளர்றதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்தா மட்டும் பத்தாது தம்பி. கொஞ்சம் உள்ளேயும் வளர்த்துக்க.



சச்சின்:
நல்லா சரக்கடிச்சிட்டு கொத்தி விட்டா, வாந்தி வர்ற மாதிரி இருக்கும், ஆனா வராது. அப்படி ஒரு இம்சையா ஆயிட்டு வர்றீங்க. விளம்பரங்களில் கூட கிரிக்கெட் விளையாடற மாதிரி நடிக்கறதுலேர்ந்தே எந்த அளவுக்கு நீங்க இந்த கேமை லவ் பண்றீங்கன்னு நல்லாத் தெரியுது. அந்த அன்பை நம்ம டீம் மேலயும் கொஞ்சம் காட்டுங்க. ப்ரெட் லீ உங்களை பந்தால தலையில குட்டறதும், கண்ணு மண்ணு தெரியாம ஆடி நீங்க கிளீன் போல்ட் ஆவுறதும் - பாக்கவே கோறாமையா இருக்கு தலை. நீங்க இந்தியன் கிரிக்கெட்டோட பாடி கார்ட் முனீஸ்வரரா இருந்தது என்னமோ உண்மை தான். ஆனா இப்போ உங்க பாடி கடகடன்னு ஆடுதே. உங்களுக்கு முன்னாடி ஆடின பெரிசுங்க எல்லாரும் டீமை விட்டு எப்படி வெளிய போனாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும்போது பலபேர்க்கு வழிகாட்டியா இருந்த, இருக்கிற, இருக்கப் போகிற நீங்க இந்த விஷயத்துலயும் முன்னோடியா இருக்கணும்கறது தான் உங்களோட உண்மையான ரசிகர்களோட விருப்பம். செய்வீங்களா? நூறாவது செஞ்சுரி அடிச்சபிறகு நீங்க ரிடையர் ஆகப்போறதா சில பேர் சொல்றாங்க. நான் கேக்கறேன், முதல்ல 99 செஞ்சுரி அடிக்கற தெம்பும் தில்லும் எவன்கிட்டங்க இருக்கு? பாண்டிங்கையும் பஞ்சராக்கிட்டாங்க. நீங்களாப் பார்த்து புரிஞ்சு நடந்துக்குங்க. ஓவரா அடம் புடிச்சீங்கன்னா அப்புறம் நாங்க வயசு வித்யாசம் பார்க்காம பேட் வேர்ட்ஸ் பேசிடுவோம், தப்பா எடுத்துக்காதீங்க. என்னதான் புதுசு புதுசா சரக்கு அடிச்சாலும் ஓல்டு மாங்கை எப்படி மறக்க முடியாதோ,அது மாதிரி புதுசா எவ்ளோ ஆளுங்க விளையாட வந்தாலும் உங்களை மறக்க முடியாது.



தோனி:
உனக்குப் பிடிச்ச நம்பர் ஏழுன்னு சொல்றாங்க. ஆனா இன்னிய தேதிக்கு இந்தியன் கிரிக்கெட் டீமைப் புடிச்சிருக்கற ஏழரை நீ தான். அதுலயும் அந்த ஸ்ரீனிவாசனும் நீயும் சேர்ந்து கிரௌண்டுக்கு வெளிய போடற ஆட்டம் இருக்கே, அப்பப்பா! அந்த ஏழுமலையானுக்கே பொறுக்காது. இந்தியன் டீமா, சென்னை சூப்பர் கிங்க்சான்னு தெரியாத அளவுக்கு அப்படி ஒரு ஊழல். நீங்க பண்ற அலம்பல்களைப் பார்த்தா வேர்ல்ட் கப் நாம ஜெயிச்சோமா இல்லை வாங்கினோமான்னு டவுட் வருது. போற போக்கைப் பார்த்தா வேர்ல்ட் கப் வர்றவன் போறவன் எல்லாம் எச்சி துப்பற வாஷ் பேசினா ஆயிடும் போலிருக்கு. இவருக்கு எதிரா எவனும் எதுவும் செய்யக் கூடாது. அப்படி எதாச்சும் செஞ்சுட்டா கறை வெச்சு பழி வாங்கிடுவாரு. கம்பீரையும் இர்பானையும் கேட்டா கதை கதையா சொல்வாங்கன்னு நினைக்கறேன். என்னிக்கு மெக்டொவேல் விளம்பரத்துல அடிக்க... சாரி... நடிக்க ஆரம்பிச்சியோ, அன்னியிலேர்ந்தே உனக்கு இறங்கு முகம் தான். குடி குடியைக் கெடுக்கும்னு சொல்வாங்களே, அது இதான் போலிருக்கு. கிரிக்கெட் டீமை காங்கிரஸ் கட்சி மாதிரி ஆக்கின பெருமை உங்களையே சேரும். இப்போ எல்லாரும் உங்களை மாஹின்னு கூப்பிடறாங்க. இதே ரேஞ்சுல போச்சுன்னா கூடிய சீக்கிரம் ராஞ்சியார்னு கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல. IPL ஆரம்பிக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்போதைக்கு இந்தியன் டீமுக்காகக் கொஞ்சம் ஆடுங்க. ரொம்ப ஆட்டம் போட்டீங்க, அப்புறம் எங்க கேப்டனை உங்களோட மோத விட்டுடுவோம். ஸ்டம்ப் மேல லெப்ட் லெக் வெச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பாரு. ஜாக்கிரதை.

என்னடா, இவங்க மூணு பேரை மட்டும் ஸ்பெஷலா தேர்ந்தெடுத்து திட்டறானேன்னு யோசிக்கறீங்களா? மத்தவங்க எல்லாம் இப்போதைக்கு வெறும் கிளைகள் தான். இவங்க தான் நம்ம டீமோட ஆணி வேர். இவங்க நினைச்சா டீம்ல என்ன வேணாலும் பண்ணலாம். அப்புறம் இந்திய கிரிக்கெட் அணி (தோனி), இந்திய கிரிக்கெட் அணி (செஹ்வாக்), இந்திய கிரிக்கெட் அணி (கொஹ்லி), இந்திய கிரிக்கெட் அணி (கம்பீர்) - இப்படியெல்லாம் நாளைக்கு கோஷ்டிங்க உருவாகிடக் கூடாது பாருங்க, அந்த ஒரு அக்கறை தான்.

ஆஸ்திரேலியன் பிட்ச்ல முதல் பத்து ஓவர் பொறுமையா பந்து தேச்சாலே போதும், அப்புறம் பகுமானமா ஆடலாம்னு சாதாரண ரசிகனுக்குக் கூட தெரிஞ்சிருக்கும்போது இவங்க பத்து ஓவருக்குள்ள 5 விக்கெட் விடறது எந்த வகையில நியாயம்?

எவ்வளவு தூக்கி அடிச்சாலும் பந்து பவுண்டரிக்குப் போக மாட்டேங்குதுன்னு தெரிஞ்சும் தூக்கி அடிச்சு அவுட் ஆகறாங்களே? இவங்களுக்கெல்லாம் மண்டையில மசாலாவே கிடையாதா?

யுவராஜ் இல்லை, ஹர்பஜன் இல்லை, அதனால தான் தோக்கறோம்னு ஒரு க்ரூப் சொல்லிக்கிட்டு திரியுது. அங்க ஒரு பதினாறு பேரு போயிருக்காங்களே, அவங்க ஒழுங்காப் புடிங்கினாலே போதும். அதுல இன்னொரு கொடுமை என்னன்னா ஒரு நாலைஞ்சு பேரு கம்பெனி செலவுல அங்க உக்காந்து மேட்ச் பாக்கறதும் பாட்டில்ல தண்ணி ரொப்பறதுமா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க. பாவம் அவன் வீட்ல கூட அந்த அளவுக்கு தண்ணி பிடிச்சிருக்க மாட்டான். தாய் சொல்லைத் தட்டாதீர்கள் இளைஞர்களே. இல்லேன்னா இப்படித் தான், கண்டவனுக்கும் தண்ணி பிடிக்கணும்.

இந்தியாவும் சிறிலங்காவும் தான் பைனல்ஸ் விளையாடும்னு நிறைய பேரு சொல்றாங்க. நானும் அதைத்தான் எதிர்பாக்கறேன். அதுல இந்தியா மரண அடி வாங்கி தோக்கணும். - அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. ஒரு வேப்பிலை மாதிரி, மாத்திரை மாதிரி, கசப்பு தான் வியாதியை குணப்படுத்தும்.

Jayaraman
New Delhi

பின் குறிப்பு: டிவியில் கிரிக்கெட் மேட்ச் வரும்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு (முன்னாடியெல்லாம் மின்தடைன்னு மரியாதையா சொன்னாங்க, இப்போ அதிகாரமா வெட்டுன்னு சொல்றாங்க) அமுல்படுத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன. மக்கள் நலனில் தான் அம்மாவுக்கு என்ன ஒரு அக்கறை! 64வது பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

4 comments:

  1. always your posts are rocking..i am laughing like anything..Thank you very much...

    ReplyDelete
  2. என்னத்தை சொல்றது போங்க! நீங்க சொன்ன மாதிரி இந்த சேவாக் மண்டையனுக்கு மண்டைக்கு வெளியேயும் இல்ல உள்ளேயும் இல்ல... வெண்ணை வெட்டி மாதிரி பேசுறது ஆனா வந்தவுடனே ஆடியன்ஸ் செட் ஆகறதுகுள்ள பெவிலியனுக்கு நடைய கட்டுறது.

    ReplyDelete
  3. Thanks for the comment guys!! keep reading and enjoying!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...